கடவுளுக்கு மட்டும் அடிபணிதல் (இஸ்லாம்)

மனிதகுலத்திற்கான கடவுளின் இறுதி செய்தி

கடவுள்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் “சரணடைதல்” ஆகும். (குரான் 3:19)

“சரணடைதல்” (அரபு மொழியில் இஸ்லாம்) என்பது ஒரு பெயர் அல்ல. இது ஆன்மாவின் முழுமையான பக்தியையும் கடவுளுக்கு மட்டும் அடிபணிவதையும் பிரதிபலிக்கும் ஒரு விளக்கமாகும். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு மற்றும் இறுதி ஏற்பாடு – குர்ஆன் உள்ளிட்ட கடவுளின் அனைத்து வேதகளின் இது முதல் கட்டளை ஆகும்.

சரணடைதோர்கள் முழு மணதுடன் கடவுளுக்கு மட்டும் வணங்குவதின் மூலமும், மறுஉலகையில் நம்பிக்கை கொள்வதன் மூலமும், நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவதன் மூலமும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது.

குர்ஆன் 5:69. நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்களாக இருப்பவர்கள், மதம் மாறியவர்கள், மற்றும் கிறிஸ்துவர்கள்: அவர்களில் எவராயினும்
(1) கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும்
(2) இறுதி நாள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும்
(3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்களுக்கு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

கடவுள் மட்டும்

உண்மையில், நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்ற நிலையில், கடவுள்-க்கு மட்டும் தங்களையே பரிபூரணமாகச் சரணடையச் செய்பவர்கள், அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்களுடைய பிரதிபலனைப் பெற்றுக் கொள்வார்கள்; அவர்கள் அச்சம் கொள்ள எதுவுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். – குர்ஆன் 2:112

கடவுள் மட்டுமே உங்களுடைய இரட்சகரும் அதிபதியும் ஆவார், மேலும் அவரே மிகச் சிறந்த ஆதரவாளருமாவார். – குர்ஆன் 3:150

நீங்கள் கடவுள்-ஐ மட்டும் வழிபட வேண்டும் – அவருடன் எந்த ஒன்றையும் இணைக்காதீர்கள். – குர்ஆன் …4:136

பாவத்திற்காக வருந்தி, சீர்திருந்தி, கடவுள்-ஐப் பற்றிப் பிடித்துக் கொண்டு, மேலும் தங்களுடைய மார்க்கத்தைக் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித் துக் கொண்டவர்கள் மட்டுமே நம்பிக்கையாளர் களுடன் கணக்கிடப்படுவார்கள். மகத்தானதொரு பிரதிபலன் கொண்டு நம்பிக்கையாளர்களைக் கடவுள் ஆசீர்வதிப்பார். – குர்ஆன் 4:146

குர்ஆன்16:98
குர்ஆனை நீர் படிக்கும் பொழுது, விரட்டப்பட்ட சாத்தானிடமிருந்து நீர் கடவுள்-யிடம் அடைக்கலம் தேடிக் கொள்ள வேண்டும்.

குர்ஆன்1:2
உம்மை மட்டுமே நாங்கள் வழிபடுகிறோம். உம்மிடம் மட்டுமே நாங்கள் உதவி கோருகிறோம்.

பரிபூரணமான மகிழ்ச்சி என்பது கடவுளுக்கு மட்டுமே சரணடைதல்.